அமெரிக்காவில் Ville என முடியும் பல ஊர்ப் பெயர்கள் உண்டு. Louisville, Nashville, Jack-sonvilleஎன்றெல்லாம் பல பிரபல ஊர்கள் உண்டு. முகநூல்(facebook.com) பயனீட்டாளர்களுக்கோ Ville என்றால் பிரபல ஆன்லைன் விளையாட்டுகளான YoVille, Fish Ville போன்றவைதான் நினைவுக்கு வரும். இந்த விளையாட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனமான Zynga (http://www.zynga.com/)சென்ற சில வாரங்களில் இன்டர்நெட் இண்டஸ்ட்ரியில் ஏற்பட்டு இருக்கும் நிகழ்வுகளின் நடுவில் மாட்டிக்கொண்டு இடியாப்பச் சிக்கலில் தவிக்கிறது. என்ன நடக்கிறது?
சமூக வலைதள விளையாட்டுகள் விறுவிறுப்பானவை. முதலில் சிலர் மட்டும் விளையாட ஆரம்பிக்கும் ஒரு விளையாட்டில், ஒருவரது சாதனைகளும், தோல்விகளும் அவரது நட்பு வட்டாரத்தின் வலைப்பக்கங்களில் பிரசுரமாகும். தமது வலைப்பக்கங்களில் வெளியாகும் இந்த விவரங்கள் அடுத்தவரது கவனத்தை ஈர்த்து, நாமும் இதில் பங்குகொள்ளலாமே என்ற விருப்பத்தை உருவாக்கி,அவரை விளையாட்டில் சேர்ந்துகொள்ளத் தூண்டும். விளையாட்டில் இணைந்துகொள்ளச் சில நிபந்தனைகள் உண்டு. அதில் முக்கியமானது: உங்களது பிறந்த நாள், ஊர், விருப்பங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும், உங்களது நட்பு வட்டாரத்தின் தகவல்களையும் விளையாட்டை விளையாட அனுமதிக் கும் நிறுவனத்திடம் கொடுக்க நீங்கள் சம்ம திக்க வேண்டும். ஆனால், Zynga நிறுவனத்தின் சமூகவிளை யாட்டுக்களின் விதிமுறைகள் எல்லை மீறு வதாகச் சென்ற வாரம் எழும்பியிருக்கும்விவா தங்கள் இந்த நிறுவனத்தை மட்டுமல்ல, இதன் விளையாட்டுக்களை உள்கொண்டிருக்கும் முகநூல் நிறுவனத்தையும் உள்ளடக்கியவை.இணையத்தின் வணிகம்பற்றித் தெரிந்த வர்களுக்கும் இது அத்தனை அதிர்ச்சியாக இருக்காது. ஆன்லைன் விளம்பரங்களில் இருந்து வரும் வருமானம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் நிறுவனங்கள், பயனீட்டா ளர்களது விவரங்கள் தெரிந்திருந்தால் அவர் களது பின்னணிக்குப் பொருத்தமானவிளம்ப ரங்களைக் காட்ட முடியும். உதாரணத்துக்கு, நீங்கள் உங்களது விருப்பங்களில் (Hobbies) ஒன்றாக பயணங்களைக் (Traveling) குறிப் பிட்டு இருந்தால், உங்களது ஊர் டிராவல் ஏஜென்ட்டின் விளம்பரத்தை நீங்கள் பார்க்கும் வலைப்பக்கங்களில் காட்டுவது பொருத்தமா னது; இப்படி இலக்குவைத்து வெளியிடப்படும் Target Advertising விளம்பரங்களுக்கு, விளம்பரதாரர்கள் அதிகப் பணம் கொடுக்கத் தயாராக இருப்பதால்,ஆன் லைன் நிறுவனங்கள் முடிந்த வரை உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள விரும்புவதில் ஆச்சர்யம் இல்லைதான்.
பிரச்னையைப் புரிந்துகொள்ள FarmVille விளையாட்டுக்குள் செல்லலாம். வெளியிடப்பட்ட சில மாதங்களிலேயே பல மில்லியன் பயனீட்டாளர் களை விளையாடவைத்த இந்த விளை யாட்டில், இன்றைய தேதிக்கு 40 மில்லியன் நிழல் பண்ணைகள். முகநூல் பயனீட்டாளர் எவரும் ஒரு பண்ணையைத் தொடங்கி,அதைப்- பண்படுத்தி, உரமிட்டு, மரங்களை நட்டு, ஆடு, மாடு களை உலவவிடலாம். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் வியப்பாக இருக்கும் இந்த விளையாட்டில் நுழையும் போது, உங்களுக்குக் கொடுக்கப்படும் நிழல் பணத்தைக் கொண்டு, தேவையான அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொண்டு பண்ணையைத் தொடங்கிவிடலாம் என்றாலும், விளையாட்டில் தீவிரமாக ஈடுபடஆரம்பித் ததும் தொடர்ந்து விளையாட நிழல் பணம் தேவை. டிராக்டர், விதை எனத் தேவையானவற்றை வாங்க இந்த நிழல் பணத்தைப் பெற்றுக்கொள்ள இரண்டு வழிகள் உண்டு: (1) நிஜ உலகின் பணத்தைப் பயன் படுத்தி, கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது Pay-Pal மூலமாகவோ நிழல் பணத்துக்குப் பணமாற்றம் செய்துகொள்வது (2) இலவசச் சலுகைகள் என்ற பெயரில் வழங்கப்படும் திட்டங்களில் பங்கேற்றுக் கொள்வது. உதாரணத்துக்கு, சந்தாதாரர்களுக்கும் சினிமா பட டி.வி.டி-க்களை வீட்டுக்கு அனுப்பும் Netflixநிறுவனம் முதல் மாதத்துத் தவணையை இலவசமாகக் கொடுக்கலாம். இதில் கலந்துகொண்டால், உங்களுக்குக் கணிசமான நிழல் பணம் கிடைக்கும். மிகக் கவனமாக இலவச காலக்கட்டம் முடிவதற்குள் Netflix membership -ஐ ரத்து செய்துவிட்டால் பிரச்னை இல்லை. மறந்துவிட்டால், விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நீங்கள் வலுக்கட்டாயமாக அதன் 'பணம் செலுத்தும்' உறுப்பினராகிவிடுவீர்கள். இப்படிவழங்கப்படும் பல சலுகைகளில் கலந்து கொள்ள கிரெடிட் கார்டுகூடத் தேவையில்லை. மொபைல், தொலைபேசி எண்ணைக் கொடுத்தால் மட்டும் போதும்; இலவச காலக்கட்டம் முடிந்ததும், பயனீட்டாளரது மொபைல் மாத பில்லில் இந்தப் பணம் இணைக்கப்பட்டுவசூலிக்கப்படும். இதனால், கிரெடிட் கார்டு வாங்கும் வயதுத் தகுதி இல்லாத டீன்-ஏஜ் இளைஞர்களையும் மிகஎளிதாக ஈர்க்கிறது என்பது முக்கிய கம்ப்ளெயின்ட்.
சூடாக விவாதிக்கப்படும் இந்தப் பிரச்னையில் பல வேகமான முடிவுகள் இந்த வாரத்தில் எடுக்கப் பட்டுள்ளன. Zynga வெளியிட்ட புதிய விளையாட்டான FishVille முகநூல் நிறுவனம் தடை செய்துள்ளது. வெளியிடப்பட்ட இரண்டு நாட்களுக்குள் 9 லட்சம் விளையாட்டுக்காரர்களைப் பங்குகொள்ளவைத்த இந்த விளையாட்டு, தனது விளம்பர விதிகளை மீறுவதாகச் சொல்லி, தடை செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அதே விதிகளைக்கொண்டுள்ள FarmVille விளையாட்டின் கதி சில வாரங்களில் தெரிய வரும். கிட்டத்தட்ட 70 மில்லியன் விளையாட்டுக்காரர்களைக்கொண்டுள்ளது இந்த விளையாட்டு.முகநூல் பயனீட்டாளரும், FarmVille விளையாட்டுக் காரருமாக இருந்தால், இது உங்களை எவ்வளவு தூரம் பாதிக்கப்படும் என்பதை விகடன் முகநூல் குழு(http://www.facebook.com/group.php?gid=45695544906)பக்கங்களில் எழுதுங்கள். விவாதிக்கலாம். Zynga நிறுவனத்தின் சிணிளி மார்க் பிங்கஸ் சென்ற வருடம் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பேசிய வீடியோ (YouTube உரலிhttp://www.youtube.com/watch?v=S7YaVVpK1G4) படுகாட்டத்தை எழுப்பிஇருக்கிறது.''நிறுவனத்தைத் தொடங்கிய நாள் முதல் எப்படியாவது வருமானத்தை ஈட்ட வேண் டும் என்பதால், எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தோம்” என்றெல்லாம் பெருமையாகப் பேசிக்கொண்டுபோக, அவரது பேச்சை அடிப் படையாகவைத்து மிகப் பெரிய Class Action வழக்கு தயாரித்துக்கொண்டு இருப்பதாக சாக்ரமெண்டோவைச் சார்ந்த பிரபல law firmதெரிவித்திருப்பது, இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்போது உள்ள லேட்டஸ்ட் நியூஸ். இந்த வழக்கில் Zynga மட்டுமல்லாமல் முகநூல் நிறுவனத்தையும் இணைக்கப் போவதாகச் சொல்லியிருப்பது இன்னும் அதிரடி. இன்டர்நெட் உலகின் காலச் சக்கரம் மிக வேகமானது. புதிய நிறுவனங்கள் சில வருடங்களுக்குள் கட்டப்படும்; அழிக்கப் பட்டும்விடும். இந்தப் பிரச்னையில் இருந்து மேற்படி நிறுவனங்கள் எப்படி மீண்டு வருகின்றன என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்! |
No comments:
Post a Comment